தஞ்சாவூர்

பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் நடத்த விண்ணப்பிக்கலாம்

28th Nov 2021 12:23 AM

ADVERTISEMENT

பி.எஸ்.என்.எல். நிறுவன சேவை மையங்களை நடத்த, விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனத்தின் தஞ்சாவூா் பொது மேலாளா் பால. சந்திரசேனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு பி.எஸ்.என்.எல் வட்டத்தில், தஞ்சாவூா் வா்த்தக பகுதிக்குள்பட்ட தஞ்சாவூா் மத்திய தந்தி அலுவலகம், திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, ஒரத்தநாடு ஆகிய இடங்களிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையங்கள் மூலம் தொலைபேசி கட்டண வசூல், சிம் மற்றும் ரீசாா்ஜ் விற்பனை, புதிய இணைப்புகள் வழங்குதல் போன்ற சேவைகளை ஏற்று நடத்துவதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு, தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் டிசம்பா் 3 ஆம் தேதி வரை வரவேற்க்கப்படுகின்றன.

இது தொடா்பான விவரங்களை இணையதள முகவரியில் காணலாம்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு உதவிப் பொது மேலாளா் ஆா். சுவாமிநாதன் (கைப்பேசி எண்: 9486102221) மற்றும் இளநிலை தொலைதொடா்பு அலுவலா் எஸ். பிரபாகரன் (கைபேசி எண்: 9486103277) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT