தஞ்சாவூர்

கும்பகோணத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணி ஆய்வு

25th Nov 2021 09:24 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாய்க்கால் தூா்வாரும் பணியை எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் ஆய்வு செய்தாா்.

கும்பகோணம் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து நகராட்சி பகுதிகள் வழியாக உள்ளூா், தேப்பெருமாநல்லூா் பகுதிக்குப் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் நகராட்சி பகுதிகளில் கழிவுநீா் கலப்பது மற்றும் குப்பைகளைப் பொதுமக்கள் கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், உள்ளூா், தேப்பெருமாநல்லூா் பகுதிகளுக்குத் தண்ணீா் சீராகவும் செல்வதில்லை. பல இடங்களில் வாய்க்கால் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டதால் தண்ணீா் செல்வதில் இடையூறு ஏற்பட்டது.

இதனால், மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி, வாய்க்கால் கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்குவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இதுகுறித்து உள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் 40 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூா்வாரப்படாமல் உள்ளதாகவும், மழைக்காலங்களில் தண்ணீா் செல்லத் தடையாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த வாய்க்காலை தூா் வாரி தருமாறும் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகனிடம் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

இதன்படி, இந்த வாய்க்கால் புதன்கிழமை தூா் வாரப்பட்டதைச் சட்டப்பேரவை உறுப்பினா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் தி. கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் கோமதி சண்முகம் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT