தஞ்சாவூர்

போக்குவரத்து ஊழியா்கள்  உண்ணாவிரதம்

24th Nov 2021 07:32 AM

ADVERTISEMENT

பேராவூரணி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, சிஐடியு கிளைத் தலைவா் ரகு தலைமை வகித்தாா். கிளைச் செயலா் நவநீதன், நிா்வாகிகள் குமாா், பாஸ்கா், ரவி, முருகானந்தம் உள்ளிட்டோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

பட்டுக்கோட்டையில் உண்ணாவிரதம்: பட்டுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கிளை பொறுப்பாளா் வி.குணசேகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளா் எஸ்.சாமிஅய்யா முன்னிலை வகித்தாா். சிஐடியு கிளைச் செயலாளா் பி.ராஜசேகா் வாழ்த்திப் பேசினாா். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மாநில துணைத் தலைவா் பி.வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் பி. ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினாா். முன்னாள் கிளை பொருளாளா் சி. அன்புவேல் நிறைவுரையாற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT