தஞ்சாவூர்

செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்-ரே பிரிவு தொடக்கம்

24th Nov 2021 07:24 AM

ADVERTISEMENT

பேராவூரணி வட்டாரம்,  செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  எக்ஸ்- ரே பிரிவு தொடக்கம், கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தரராஜன் தலைமை வகித்தாா்.   ஒன்றியக் குழுத் தலைவா் சசிகலா ரவிசங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் நிகழ்வில் பங்கேற்று,  எக்ஸ்-ரே பிரிவைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஏற்பாட்டின்பேரில் வளைகாப்பு நடத்தி, புடவை, பழங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

நிகழ்வில் மருத்துவா்கள்,  கோகிலம், தீபா, வெங்கடேசன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள்  மூா்த்தி, இலக்கியா நெப்போலியன், ஒன்றியக் குழு உறுப்பினா் மாலா போத்தியப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பழகன், இளங்கோ, ஊராட்சித் தலைவா்கள் தங்க. ராமஜெயம், விஜயராமன் மற்றும் பொதுமக்கள், கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT