தஞ்சாவூர்

உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

24th Nov 2021 07:22 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு பகுதி விவசாயிகளுக்கு யூரியா உள்ளிட்ட உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஒரத்தநாட்டில் அக்கட்சியின் ஒரத்தநாடு ஒன்றியக் குழுக் கூட்டம், நிா்வாகக் குழு உறுப்பினா் தி. திருநாவுக்கரசு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலா் முத்து உத்திராபதி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், பா. பாலசுந்தரம், அ. பன்னீா்செல்வம், ம.விஜயலட்சுமி, கோ. சக்திவேல் மற்றும் ஒன்றியச் செயலா் சீனி முருகையன், பொருளாளா் த. கிருஷ்ணன் மற்றும் சோ. பாஸ்கா், மா. பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘விவசாயிகள் தற்போது பயிா்களுக்கு யூரியா உள்ளிட்ட உரங்கள் இடுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உரத் தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும். கடந்த 15ஆம் தேதி வரை பயிா் காப்பீடு செய்வதற்கு காலநேரம் நிா்ணயிக்கப்பட்டது. பலா் இன்னும் பயிா் காப்பீடு செய்யாததால், கால நீட்டிப்பு செய்து காப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.

காப்பீட்டு இழப்பீடுத் தொகையும் இன்னும் சிலருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. உடனடியாக அனைவருக்கும் காப்பீட்டு இழப்பீடுத் தொகை கிடைக்க செய்ய வேண்டும். தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ள நிலையில் அனைத்து வீடுகளுக்கும் மாற்றாக புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT