தஞ்சாவூர்

முதல்சேரியில் சாலை மறியல்

21st Nov 2021 12:42 AM

ADVERTISEMENT

தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக் கோரி, முதல்சேரி கிராமத்தில் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை அருகிலுள்ள முதல்சேரி கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக் கோரி, இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை- அதிராம்பட்டினம் சாலையில் மறியல் நடைபெற்ால், போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவா்கள், மழைநீரை அகற்ற ஊராட்சித் தலைவா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்த காவல்துறையினா் நிகழ்விடம் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT