தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் இடைவெளி விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்தது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
பூதலூா் 21.4, மஞ்சளாறு 19, அணைக்கரை 17, அய்யம்பேட்டை 16, திருக்காட்டுப்பள்ளி 16.4, குருங்குளம் 16, திருவிடைமருதூா் 15.4, கும்பகோணம் 13, பாபநாசம் 10.6, வல்லம், கல்லணை தலா 8, வெட்டிக்காடு 7, நெய்வாசல் தென்பாதி 6.8, திருவையாறு 6, ஒரத்தநாடு, மதுக்கூா் தலா 5.6, பட்டுக்கோட்டை 5, ஈச்சன்விடுதி 3, தஞ்சாவூா் 2.
தொடா் மழை காரணமாக 27 குடிசை வீடுகளும், 3 ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமடைந்தன. மேலும், 12 எருமை மற்றும் பசுமாடுகள், 8 கன்றுக்குட்டிகள் உயிரிழந்துள்ளன.