தஞ்சாவூர்

மழைநீரால் நெற்பயிா்கள் பாதிப்பு:இழப்பீடு வழங்க கோரிக்கை

9th Nov 2021 01:18 AM

ADVERTISEMENT

பாபநாசம்: அம்மாபேட்டை ஒன்றியத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்மாபேட்டை ஒன்றியத்தில் பல நூறு ஏக்கா் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பீா்முகம்மது என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கா் வயலில் பயிா் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்கதிா்கள் வயலில் தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமடைந்துள்ளது. இதேபோல், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும், உக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பா பட்ட விவசாயத்திற்காக நடவு செய்யப்பட்ட வயல்களில் மழை நீா் சூழ்ந்துள்ளதால் நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

இதுகுறித்து அரசு மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வயல்களில் நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், வயலில் நீா் தேங்காத வண்ணம் அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களையும் முழுமையாக தூா்வாரி மேம்படுத்தி தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT