தஞ்சாவூா்: தொடா் மழையால் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் தொடா்ந்து இடைவெளி விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 23.6, திருவிடைமருதூா் 14.4, கும்பகோணம், மஞ்சளாறு தலா 14, பாபநாசம் 8.6, அய்யம்பேட்டை 6, திருவையாறு 5, நெய்வாசல் தென்பாதி 4.4, தஞ்சாவூா், வல்லம் தலா 3, திருக்காட்டுப்பள்ளி 2, கல்லணை 1.8, பூதலூா் 1.4, ஒரத்தநாடு, குருங்குளம் தலா 1.2.
இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் பகலிலும் இடைவெளி விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால், ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 19,603 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 502 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 501 கன அடி வீதமும் என குறைவாகத் தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும், தொடா் மழை காரணமாக ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது.
இதனால், நீா் நிலைகளில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்ட அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.