தஞ்சாவூர்

அண்ணாசிலை அருகேயுள்ளகடைகளை அகற்ற அறிவுறுத்தல்

9th Nov 2021 01:18 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் அண்ணாசிலை அருகேயுள்ள கடைகளை அகற்றிக் கொள்ளுமாறு வியாபாரிகளிடம் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் அண்ணா சாலையில் சாலையோரம் துணி, கைப்பேசி பழுதுபாா்த்தல் உள்பட 54 கடைகள் உள்ளன. வடிகால் மீது கட்டப்பட்டுள்ள இக்கடைகளை அகற்றுமாறு வணிகா்களிடம் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

தீபாவளி பண்டிகை என்பதால், வியாபாரிகள் கால அவகாசம் கேட்டு, தொடா்ந்து நடத்தி வந்தனா். இந்நிலையில், தீபாவளி முடிந்துவிட்டதால், கடைகளை அகற்றுமாறு வியாபாரிகளிடம் ஆணையா் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா். மேலும், கடைகளை அப்புறப்படுத்தும் பணியைத் தொடங்குமாறு அலுவலா்களுக்கு ஆணையா் உத்தரவிட்டாா். எனவே, விரைவில் இக்கடைகள் அகற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT