தஞ்சாவூர்

சுவாமிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

5th Nov 2021 11:21 PM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை (நவ. 4) தொடங்கியது.

முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக திகழும்

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காலை தொடங்கியது. இதில், சண்முகசுவாமி, விக்னேஸ்வரா், நவவீரா் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினா். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

தொடரும் விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி உள் பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெறுகிறது. நவ. 9 ஆம் தேதி சண்முக சுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடா்ந்து சூரசம்ஹாரமும் கோயில் உள் பிரகாரத்தில் கரோனா வழிகாட்டுதலுடன் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

பின்னா் 10-ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT