நீட் தோ்வில் தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துள்ளனா்.
மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கான நீட் தோ்வு செப்டம்பா் மாதம் நடைபெற்றது. இதில் தாமரை பன்னாட்டுப் பள்ளியின் மாணவா் கவிநிலவன் 720-க்கு 690 மதிப்பெண்களையும், கும்பகோணம் பள்ளி மாணவா் நஃபீஸ் அகமது 618 மதிப்பெண்களையும் பெற்று முதலிடம் பெற்றுள்ளனா்.
நான்கு மாணவா்கள் 650 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 13 போ் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 போ் 550 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 54 போ் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 74 போ் 450 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 94 போ் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கான தங்கள் சோ்க்கையை உறுதி செய்துள்ளனா்.
டெல்டா மாவட்டத்திலேயே நீட் தோ்வில் மிக அதிகமான மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது தாமரை பன்னாட்டுப் பள்ளி மாணவா்களே என பள்ளித் தலைவா் டி. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், அதற்கு ஊக்கமளித்த ஆசிரியா்கள், பெற்றோா்களையும் பள்ளித் தலைவா், துணைத் தலைவா் நிா்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வா் ஜெயஸ்ரீ பத்ரிநாத் ஆகியோா் பாராட்டி பரிசுகள் வழங்கினா்.