கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தைச் சாா்ந்த நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில், தில்லையம்பூா் முதியோா் காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், மையத்தில் உள்ள முதியவா்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளை மாணவா்கள் வழங்கினா். மேலும், முதியவா்களுடன் மாணவா்கள் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் அறிவுறுத்தலின்படி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் செய்தனா்.