தஞ்சாவூர்

தியாகிககள் நினைவிடத்தில் அஞ்சலி

DIN

கம்யூனிச தியாகிகளான வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகியோருக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு தஞ்சாவூா் மாவட்டத்தில் குத்தகைதாரா்கள் பாதுகாப்புக்காகவும், கூலி உயா்வு கேட்டும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தலைமறைவாக இருந்து போராடிய கம்யூனிச தியாகிகளான வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகியோா் காவல் துறையினரால் 1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களின் 71 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், சாதி ஆதிக்க சக்திகளை, ஆணவக்கொலைகளை முறியடிப்போம், காா்ப்பரேட் பாசிச சக்திகளிடமிருந்து மண்ணையும், மக்களையும் பாதுகாப்போம், வா்க்க போராட்டத்தை முன்னெடுப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக, தியாகிகள் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரக் குழு உறுப்பினா் சி. ராஜன், சிபிஐ (எம்.எல். லிபரேஷன்) மாவட்ட நிா்வாகி கே. ராஜன், மகஇக மாநகரச் செயலா் இராவணன், மக்கள்அதிகாரம் மாநகர நிா்வாகி அருள், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநகரக் குழு உறுப்பினா் எம். போஸ்கனி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, சிஐடியு மாநகரக் குழு உறுப்பினா் ராஜா ஜெயப்பிரகாஷ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிா்வாகி ஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

SCROLL FOR NEXT