தஞ்சாவூர்

தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்

22nd Mar 2021 01:58 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல என்று மநீம தலைவர் பட்டுக்கோட்டை திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார். 

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி மநீம வேட்பாளர் சதாசிவம், பேராவூரணி ஐஜேகே வேட்பாளர் பச்சமுத்து, மன்னார்குடி மநீம வேட்பாளர் அன்பானந்தம் ஆகியோருக்கு வாக்குகள் கேட்டு பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: எங்களுக்கு அரசியல் தொழில் அல்ல, மநீம வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வேறு தொழில் உள்ளது. இவர்கள் அரசியலுக்கு வருவது சேவை செய்யவே. இதற்கு முன்னுதரணம் என்னையே வைத்துக்கொள்ளலாம். 

என்னை சின்னவயதில் இருந்து தோல் தூக்கிவிட்டது தமிழ் மக்களாகிய நீங்கள்தான். அதற்கு கைமாறு செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன். நான் வரி நேர்மையாக செலுத்துகிறேன் என் வேலை முடிந்தது என்று செல்லமுடியாது. இனிமேல்தான் என் வேலை ஆரம்பமாகிறது.  நான் அரசியலுக்கு வரமால் போனால் என் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. இப்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு நாம் காரணமாக இருக்கலாம்.

ஆனால் நிரந்தரமான போக்குவரத்து நெரிசலுக்கு தற்போது ஆட்சி செய்தவர்கள் சாலை விரிவாக்கம் செய்யாததே காரணமாகும். இந்த தொகுதி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் செய்யவில்லை. ஓட்டுக்கு நாங்கள் பணம் கொடுக்கமாட்டோம். வேட்பாளர்கள் கொடுக்கும் 300, 500, 5000 பணத்தை வாங்காமல் இருங்கள் அது 5 இலட்சமாக மாறும். அவர்கள் யார் தானம், தர்மம் கொடுக்க, இது அனைத்தும் உங்களிடம் இருந்து பெறப்பட்ட பணம், அது சில்லரையாக மாற்றி ஓட்டுக்காக உங்களிடம் கொடுக்கிறார்கள். 

ADVERTISEMENT

ஏப்ரல் 6ஆம் தேதி 50 வருடமாக நீங்கள் அனுபவித்த பிரச்னைக்களுக்கு மாற்ற ஒரு வாய்ப்பு உள்ளது. இல்லத்தரசிகளுக்கான ஊதியம் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவித்தேன். அதை இன்று ஆளுக்கு ஆள் அறிவித்து வருகிறார்கள். இது லஞ்சம் அல்ல, ஊதியமாக தருகிறோம் என்றோம். ஓவ்வொரு வீட்டிலும் மநீம உறுப்பினர்கள் தோன்றியுள்ளார்கள். 
நான் செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆதரவும், ஆசியும் எனக்கு நிறைய கிடைக்கின்றது, இளம் வாக்களர்கள், அறிவார்ந்த வாக்காளர்கள் மநீம-ஐ ஆதிரிக்கின்றனர்.

இவர்கள் வெளியில் இருந்து மாற்றத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல. உங்கள் மரியதை விற்பனைக்கு அல்ல, உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, உங்கள் எதிர்காலம், உங்கள் சந்ததிகளின் எதிர்காலம் விற்பனைக்கு அல்ல. ஆட்சியாளர்கள் செய்து கொடுக்கும் வசதிகள் எல்லாம் அவர்கள் செய்யும் தர்மமும் அல்ல. இது உங்களுக்கு சேரவேண்டிய சேவை,  உரிமை.  சேவை பெறும் உரிமை உங்களுடையது  அதை வழங்கும் முதல் கட்சியாக தமிழகத்தில் மநீம இருக்கும். தைரியமாக ஊழல் செய்பவர்களை நீக்குவதற்கும், தண்டிப்பதற்கும், எல்லாவற்றையும் சரி செய்வதற்கு நாங்கள் தயராக உள்ளோம்.

அதற்கான வலுவை எங்களுக்கு வாக்களித்து மக்களாகிய நீங்கள் எங்களுக்கு தரவேண்டும் என்று பேசினார்.

Tags : KamalHaasan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT