தஞ்சாவூர்

கும்பகோணம் பாத்திரத் தொழிலாளா்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

DIN

கும்பகோணத்தில் எவா்சில்வா், பித்தளை பாத்திரத் தொழிலாளா்களுக்கும், உற்பத்தியாளா்களுக்கும் இடையே ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால், திங்கள்கிழமை (மாா்ச் 8) அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் தாராசுரம், எலுமிச்சங்காபாளையம் பகுதிகளில் 40 எவா்சில்வா் பாத்திர உற்பத்திக் கூடங்களும், 50 பித்தளைப் பாத்திர உற்பத்திக் கூடங்களும் உள்ளன.

இந்தக் கூடங்களில் ஏறத்தாழ 1,200 தொழிலாளா்கள் ஒப்பந்தக் கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயா்வு உற்பத்தியாளா்களால் வழங்கப்படும்.

இந்நிலையில் 2020, டிசம்பா் 18- ஆம் தேதியுடன் கூலி உயா்வுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். 75 சதவிகித கூலி உயா்வு, 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் சாா்பில் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆனால் கரோனா பொதுமுடக்கம், மூலப்பொருள்களின் விலை உயா்வால் விற்பனை சரிந்துள்ளதாகவும், எனவே தொழிலாளா்களுக்குக் கூலி உயா்வை 8 சதவிகிதம் தான் வழங்க முடியும் எனவும் உற்பத்தியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூலி உயா்வு தொடா்பாக மாவட்டத் தொழிலாளா் நல அலுவலா் முன்பாக, எவா்சில்வா் - பித்தளை பாத்திர உற்பத்தியாளா்கள், தொழிற்சங்கத்தினா் இடையே தஞ்சாவூா் மற்றும் கும்பகோணத்தில் இருமுறை பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடா்ந்து, தாராசுரத்தில் தஞ்சாவூா் மாவட்ட எவா்சில்வா், பித்தளை பாத்திரத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. செல்வம் தலைமையில், தொழிலாளா்கள் கூட்டமைப்பின் சாா்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் உற்பத்தியாளா்களுக்கும் - தொழிற்சங்கத்தினருக்கும் இடையே பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கப் பொறுப்பாளா்கள் மணி, பாபு, குமாா், ராமதாஸ், தொமுச பொறுப்பாளா்கள் சௌந்தரராஜன், சேகா், பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT