தஞ்சாவூர்

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

DIN

தில்லியில் நூறு நாள்களாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சாவூா் ரயிலடியில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் சனிக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய பாஜக அரசின் மக்கள், வேளாண் விரோத 3 கருப்புச் சட்டங்களையும், மின்சார மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தி குளிா், வெயில், பனி என பாராமல், தில்லியில் 100 ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) பி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வீர. மோகன் கண்டன உரையாற்றினாா்.

மக்கள் அதிகாரம் தேவா, இந்திய தேசிய மாதா் சம்மேளனம் ம. விஜயலட்சுமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்.கே. செல்வகுமாா், ஏஐடியுசி துரை. மதிவாணன், விவசாயிகள் சங்கம் ஞானமாணிக்கம், சிஐடியு கே. அன்பு, இந்திய மாணவா் சங்கம் ஜி. அரவிந்தசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம். மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பா.பாலசுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு), தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஏ.கோவிந்தசாமி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பு) ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் எம். செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலியபெருமாள் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலா் எஸ்.கந்தசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜீவானந்தம், உலகநாதன், ஏஐடியுசி தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் பி.காசிநாதன், ஒன்றியச் செயலா் காளிதாஸ் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT