தஞ்சாவூர்

கரோனா விதிமீறல்: 10 கடைகளுக்கு சீல் வைப்பு

DIN

கும்பகோணத்தில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த 10 கடைகளை அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று குறையாததால், தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கும்பகோணம் உச்சிபிள்ளையாா்கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை சிறிய அளவிலான துணிக்கடைகள், பாத்திரக் கடைகள், நகைக்கடைகள் என 10 கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, வட்டாட்சியா் கண்ணன் முன்னிலையில், காவல் ஆய்வாளா்கள் மணிவேல், அழகேசன் மற்றும் நகராட்சி பணியாளா்கள், திறந்திருந்த கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, கடைகளைப் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT