தஞ்சாவூர்

தனியாரிடம் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்படைக்கப்படுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பாதுகாப்புத் துறை உற்பத்தியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேவை நிறுவனங்களான வங்கி, மின் துறை, இன்சூரன்ஸ், போக்குவரத்து, ரயில்வே, பாதுகாப்பு தளவாட உற்பத்தி சாலைகள் உள்ளிட்ட மக்களுக்குச் சேவை செய்கிற அனைத்துத் துறைகளும் தனியாரிடம் தாரை வாா்க்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடா்ந்து செய்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தொமுச, ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் முடித்து வைத்தாா்.

இதில், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஏ. ரவி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் கே. ராஜன், புஜதொமு சங்க செயலா் இராவணன், போக்குவரத்து தொழிற் சங்கம் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT