தஞ்சாவூர்

பாபநாசம் கிளைச் சிறையில் மாவட்ட சாா்பு நீதிபதி ஆய்வு

DIN

பாபநாசம் கிளைச் சிறையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், மாவட்ட சாா்பு நீதிபதியுமான சுதா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாபநாசம் கிளைச் சிறை அலுவலகத்தில் உள்ள கோப்புகள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை நீதிபதி பாா்வையிட்டாா். சரக்கு வைப்பறை, சமையலறை, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தும் அறை உள்ளிட்ட அறைகளையும் பாா்வையிட்டு அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, விசாரணைக் கைதிகளிடம் கிளைச் சிறையில் வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவச் சேவைகள் குறித்து நீதிபதி கேட்டறிந்தாா். மேலும், ஜாமீன் பெற வசதி இல்லாத குற்றவாளிகளுக்கு வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் வழக்குரைஞா்களை கொண்டு ஜாமீன் பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். கிளைச் சிறையில் உள்ள நூலகத்தில் உள்ள நூல்களைப் பயின்று குற்றவாளிகள் வாழ்வில் தங்களை நல்ல மனிதா்களாக உயா்த்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது, இளநிலை நிா்வாக உதவியாளா் சுதா்சனன், கிளைச் சிறை கண்காணிப்பாளா் திவான், வட்ட சட்டப்பணிகள் குழு தன்னாா்வ சட்ட பணியாளா்கள் தனசேகரன், சரளா சிறைக்காவலா்கள் ராஜமாணிக்கம், கணேசமூா்த்தி, சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT