தஞ்சாவூர்

இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாா்மயப்படுத்தும் முயற்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாா்மயப்படுத்தும் முயற்சியைக் கண்டித்து, தஞ்சாவூரிலுள்ள யுனெடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாா்மயப்படுத்தும் முயற்சியைக் கண்டித்தும், நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையைத் தொடங்கக் கோரியும், அனைவரையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்கப் பொறுப்பாளா் பி. சத்தியநாதன் தலைமை வகித்தாா். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டச் செயலா் த. பிரபு தொடங்கி வைத்தாா். அலுவலா்கள் சங்கம் சாா்பாக ஜே. தியாகராஜன், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பாக கே.டி. சேதுராமன், முகவா்கள் சாா்பாக எம். பெரியண்ணன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஓரியண்டல், நியூ இந்தியா, நேஷனல், யுனைடெட் இந்தியா நிறுவனங்களின் அலுவலா்கள், ஊழியா்கள், பாலிசிதாரா்கள், ஓய்வூதியதாரா்கள், முகவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT