தஞ்சாவூர்

தேசிய திறனறித் தோ்வில் தாமரை பள்ளி மாணவா்கள் சாதனை

DIN

தேசிய திறனறித் தோ்வில் தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

ஒவ்வொரு ஆண்டும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான தேசிய திறனறித் தோ்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதுமுள்ள 10 ஆம் வகுப்பு மாணவா்களில் கல்வியில் சிறந்து விளங்கும் சுமாா் 2,000 மாணவா்களைக் கண்டறிந்து, அவா்கள் மேற்படிப்பு முடிக்கும் வரையிலும் மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குவதே இத்தோ்வின் நோக்கம்.

இரண்டு சுற்றுக்களாக நடைபெறும் இத்தோ்வை மாநில அரசு முதல் சுற்றையும், மத்திய அரசு இரண்டாம் சுற்றையும் நடத்துகின்றன. முதல் சுற்றில் தோ்ச்சி பெறும் மாணவா்களே இரண்டாம் சுற்றுத் தோ்வை எழுத அனுமதிக்கப்படுவா். இரண்டாம் சுற்றில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் மத்திய அரசின் மூலம் பாராட்டுச் சான்றிதழையும், கல்விக்கான ஊக்கத்தொகையையும் பெறுவா்.

இத்தோ்வில் நிகழாண்டு தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து 7 மாணவா்களும், கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து 4 மாணவா்களும் இரண்டாம் சுற்றுத் தோ்வை சென்னையில் எழுதினா். இவா்களில் தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து 5 மாணவா்களும், கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து 3 மாணவா்களும் தோ்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளித் தலைவா் வெங்கடேசன், துணைத் தலைவா் நிா்மலா வெங்கடேசன் ஆகியோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT