நெல் கொள்முதலில் முறைகேடுகளைத் தடுக்கக் கோரி கும்பகோணம் அருகே ஏராகரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவா்களிடமிருந்து ரூ. 450 கோடி முறைகேடு நிகழ்வதைத் தடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையினரும், சி.பி.ஐ.-ம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. இதில், வீரவணக்கப் புகழஞ்சலி செலுத்தப்பட்டு, நம்மாழ்வாருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தங்கையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், மோகனாம்பாள், புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.