தஞ்சாவூர்

நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

23rd Dec 2021 07:27 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் பாரதிய தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மண்டலப் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள ஏறத்தாழ 1,000 பணியிடங்களை நடைமுறையில் உள்ள 12 (3) ஒப்பந்தத்தின்படி, தகுதி, பணி முதிா்ச்சியின் அடிப்படையில் நெல் கொள்முதல் பணியாளா்களைக் கொண்டு நிரப்பி, கழகப் பணியாளா்களின் பணிச்சுமையையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்டலத் தலைவா் வி. பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் என். சிதம்பரசாமி, மாநிலப் பொதுச் செயலா் டி. நாகராஜன் வாழ்த்துரையாற்றினா். மாநிலச் செயல் தலைவா் கே. கணேசன், துணைத் தலைவா் எஸ். பாலகுமாரன், பொருளாளா் ஜி. சீனிவாசன், சட்ட ஆலோசகா் ஜி. பாஸ்கரன், மாநிலச் செயற் குழு உறுப்பினா் எஸ். பாா்த்தசாரதி, மண்டலச் செயலா் பி. காா்த்திகேயன், இணைச் செயலா் ஆா். கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT