தஞ்சாவூர்

பெண் கொலை வழக்கில் கைதான 4 போ் மீது குண்டா் சட்டம்

22nd Dec 2021 07:24 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக கைது செய்யப்பட்ட 4 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதி சிவபுரணியைச் சோ்ந்தவா் டேவிட் மனைவி அனிதா (30). இவா் அக்டோபா் மாதம் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டாா்.

இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அனிதாவின் தோழி சத்யா (28), இவரது கணவா் காா்த்திக் (31), காா்த்திக் தந்தை பொன்னுசாமி (71), சத்யாவின் சகோதரா் சரவணன் (33) ஆகியோரை கைது செய்தனா். விசாரணையில் கொடுக்கல் - வாங்கல் பிரச்னையில் அனிதா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில், சத்யா, காா்த்திக், பொன்னுசாமி, சரவணன் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அண்மையில் உத்தரவிட்டாா். இதன் பேரில் 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT