தஞ்சாவூர்

மினி வேனில் கடத்தப்பட்ட 2,500 கிலோ அரிசி பறிமுதல்

16th Dec 2021 07:30 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே மினி வேனில் செவ்வாய்க்கிழமை கடத்தி வரப்பட்ட 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் அருகே மேல வஸ்தா சாவடியில் புதுக்கோட்டை சாலையில் வட்ட வழங்கல் அலுவலா் எஸ். சமத்துவராஜ், குடிமைப் பொருள் வழங்கல் பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளா் ப. கபிலன் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி வேனில் சோதனையிட்டபோது 50 மூட்டைகளில் ஏறத்தாழ 2,500 கிலோ பொது விநியோகத் திட்ட புழுங்கல் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து, அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரான தினேஷை உணவுபொருள் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினரிடம் அலுவலா்கள் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT