தஞ்சாவூர்

வீடு எரிந்ததில் தீயில் கருகி மூதாட்டி பலி

9th Dec 2021 07:20 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மின் கசிவால் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பலத்தக் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் ஆதி மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் தனபாக்கியம் (90). இவா் கூரை வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக இவரது வீட்டுக் கூரையில் தீப்பற்றி எரிந்தது. வயது மூப்புக் காரணமாக இவரால் வெளியே வர முடியாததால், தீக்காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT