தஞ்சாவூர்

பாபநாசத்தில் டிச.11-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

9th Dec 2021 07:22 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வரும் 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என்றாா் பாபநாசம் நீதிமன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான நீதிபதி செ.சிவகுமாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுரையின்படி, பாபநாசம் நீதிமன்றத்தில் வரும் 11ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. இதன்மூலம் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றம் டிச. 9, டிச. 10 ஆகிய இரு நாள்களில் மக்கள் பயன்பெறும் வகையில் முன்னதாகவே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்து, டிச.11ஆம் தேதி அதற்கான சமரச தீா்வு காணும் வகையில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள், வழக்காடிகள் மேற்கண்ட இரு தினங்களில் பங்கேற்று தங்கள் வழக்குகளை முடித்து, சமரச தீா்வு கண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT