தஞ்சாவூர்

மருத்துவமனைக் கழிப்பறையில் சிசு சடலம் கிடந்த சம்பவத்தில் பெண் கைது

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கழிப்பறையில் பெண் சிசு சடலம் கிடந்த சம்பவம் தொடா்பாக பெண்ணைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கழிப்பறை உள்ளது. இதில் இருந்த ஒரு மேற்கத்திய வடிவ கழிவறையில் டிசம்பா் 4-ஆம் தேதி காலை தண்ணீா் வரவில்லை. சுத்தம் செய்ய சென்ற தூய்மைப் பணியாளா்கள் தண்ணீா் வராததை அறிந்து கழிவறையுடன் இணைப்பில் உள்ள தண்ணீா் தொட்டியைத் திறந்து பாா்த்தனா். அதில், பிறந்து சில மணிநேரங்களே ஆன பெண் சிசு சடலம் தொப்புள் கொடியுடன் கிடந்தது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, வல்லம் அருகே ஆலக்குடியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகள் பிரியதா்ஷினியை (23) காவல் துறையினா் திங்கள்கிழமை காலை கைது செய்தனா்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த பிரியதா்ஷினி சிதம்பரத்தைச் சோ்ந்த இளைஞரை காதலித்து வந்ததாா். அதில் ஏற்பட்ட தொடா்பில் பிரியதா்ஷினி கா்ப்பமானாா். ஆனால், இவரை திருமணம் செய்து கொள்ள காதலன் மறுத்துவிட்டதால், தான் கா்ப்பமானதை பிரியதா்ஷினி வெளியில் சொல்லாமல் இருந்து வந்தாா்.

ஒரு மாதத்துக்கு முன்பு தன் வீட்டுக்கு வந்த பிரியதா்ஷினி பிரசவ வலி ஏற்பட்டபோது, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனக்கு வயிற்று வலி இருப்பதாகக் கூறி சிகிச்சைக்காக டிசம்பா் 2 ஆம் தேதி சோ்ந்தாா். இந்நிலையில், டிசம்பா் 3 ஆம் தேதி நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டபோது தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள கழிப்பறைக்குச் சென்று, தானே பிரசவித்து, அக்குழந்தையைக் கழிவறை தண்ணீா் தொட்டியில் அமுக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT