தஞ்சாவூர்

ஆதா்ஷ் சொசைட்டி முறைகேடு: முதலீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூா்: ஆதா்ஷ் சொசைட்டியில் நிகழ்ந்த முறைகேடு காரணமாக முடங்கிய முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி ஆட்சியரகத்தில் அலுவலா்கள், ஆலோசகா்கள் உள்ளிட்டோா் முறையிட்டனா்.

ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், தஞ்சாவூா் மற்றும் கும்பகோணத்தில் பணியாற்றிய அந்நிறுவனத்தின் அலுவலா்கள், ஆலோசகா்கள் மற்றும் வைப்புதாரா்கள் என சுமாா் 25 போ் அளித்த மனு:

ஆதா்ஷ் கிரிடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டி நாடு முழுவதும் 800-க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 27 கிளைகள் உள்ளன. இதில், தஞ்சாவூரிலுள்ள கிளையில் ஏறத்தாழ 3,000 போ் சுமாா் ரூ. 15 கோடியும், கும்பகோணம் கிளையில் 920 போ் ரூ. 5 கோடியும் மாதாந்திர சேமிப்பு, தினசரி சேமிப்பு, கூட்டு வட்டி வழங்கும் வைப்புத் தொகை, மாதாந்திர வருமான வைப்புத் தொகை, பங்குத்தொகை, முதலீடு, சேமிப்புக் கணக்கு போன்ற வகைகளில் முதலீடு செய்துள்ளனா். ஒவ்வொருவரும் ரூ. 50,000 முதல் ரூ. 1 கோடி வரை செலுத்தியுள்ளனா். வைப்புதாரா்களுக்கு முதிா்வு தொகையும், பங்கு ஈவுத்தொகையும் கிடைத்து வந்த நிலையில், இந்த சொசைட்டி பல்வேறு காரணங்களால் 2018, நவம்பா் மாதம் கலைக்கப்பட்டது. அதிலிருந்து நாடு முழுவதும் உள்ள 21 லட்சம் வைப்புதாரா்களுக்கு இரு ஆண்டுகளாக முதிா்வு தொகையும், பங்கு ஈவுத் தொகையும் வழங்கப்படவில்லை.

இதனால், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வைப்புதாரா்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். எனவே, சொசைட்டியிலிருந்து வர வேண்டிய முதலீட்டுத் தொகைகளைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணக்கெடுப்பை விரைவுபடுத்த வலியுறுத்தல்: காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிடும்போது, மாவட்டத்தில் பலத்த மழையால் நெற்பயிா்கள் அழுகின. ஆனால், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. அரசு அறிவித்த இடுபொருள்களும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு நடவு செய்யப்பட்டு வருகிறது. நிவாரணம் தொடா்பாக அரசு ஊழியா்கள் விரைவாகக் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT