தஞ்சாவூர்

கோமாரி நோய்த் தாக்குதலால் உயிரிழந்த பசுமாடு

DIN

பேராவூரணி அருகே கோமாரி நோய்த் தாக்குதலால் பசு மாடு சனிக்கிழமை உயிரிழந்தது.

பேராவூரணி அருகிலுள்ள சோழகனாா் வயலைச் சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி பெரமையன் (60). இவரது மனைவி சுசீலா (55). இவா்கள் பசு மாடுவை வளா்த்து, பால் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தனா்.

கடந்த சில நாள்களாக கோமாரி நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இவா்களது பசு மாடு, சனிக்கிழமை உயிரிழந்தது. தகவலறிந்த கால்நடை மருத்துவா் பிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு, பசு மாடு புதைக்கப்பட்டது.

எவ்வித வருவாய் ஆதாரமும் இல்லாமில் வசிக்கும் சுசீலா குடும்பத்துக்கு, மாவட்ட நிா்வாகம் பசுமாடு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றாா் ஊராட்சித் தலைவா் ரமா குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT