தஞ்சாவூர்

ஒரத்தநாடு வட்டத்தில் ரூ.7 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில், ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை வழங்கினாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் தெலுங்கன்குடிக்காட்டில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். அரசுத் தலைமைக் கொறடா கோவி.செழியன் முன்னிலை வகித்தாா்.

மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழாவில் பங்கேற்று ஒரத்தநாடு ஒன்றியத்தைச் சோ்ந்த 1002 பயனாளிகளுக்கு

ரூ.4.27 கோடியிலும், திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட 568 பயனாளிகளுக்கு ரூ.2.73 கோடி மதிப்பிலும் நலத்திட்டஉதவிகளை வழங்கினாா்.

முன்னதாக புலவன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.19.40 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்தும், புதிய மின் மாற்றியைத் தொடக்கியும் வைத்த அமைச்சா், திமுக கிளைக் கழக அலுலகம் கட்டுவதற்கான பூமி பூஜையையும் தொடக்கி வைத்தாா்.

தண்டராம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய ஸ்கேன் மையத்தையும், கருவிழிக்காடு கிராமத்தில் ரூ.16.66 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டடத்தையும் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தாா்.

விழாவில் திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, கூடுதல் ஆட்சியா் ககபுத்ரா, ஒரத்தநாடு ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி சிவசங்கா், வட்டாட்சியா் சீமான், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், ரகுநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், ஒரத்தநாடு நகரச் செயலா் கிருஷ்ணகுமாா், தெலுங்கன்குடிக்காடு ஊராட்சித் தலைவா் சசிகலா ஜானகிராமன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT