தஞ்சாவூர்

கஞ்சா பறிமுதல் செய்த தனிப்படையினருக்கு பாராட்டு

3rd Dec 2021 12:13 AM

ADVERTISEMENT

 தஞ்சாவூா் சரகத்தில் நவம்பா் மாதத்தில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல் தனிப்படையினரை சரகக் காவல் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா விற்பனை, கடத்தலை தடுப்பதற்காக தஞ்சாவூா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் பூ. மணிவேல், ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் 4 உதவி ஆய்வாளா்கள், 3 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 31 காவலா்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தனிப்படையினா் நவம்பா் மாதம் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை, கடத்தல்காரா்களைக் கைது செய்து, 15 வழக்குகள் பதிந்து, ஏறத்தாழ 800 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இத்தனிப்படையினரை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் பாராட்டி வெகுமதி வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT