தஞ்சாவூர்

வீடு, கடைகளின் பூட்டை உடைத்துரூ. 8 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய இளைஞா் கைது

3rd Dec 2021 12:14 AM

ADVERTISEMENT

பாபநாசத்தில் வீடு, கடைகளின் பூட்டை உடைத்து சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் வட்டார பகுதியில் உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் ஒரு வீட்டில் டி.வி. மற்றும் 1/2 பவுன் தோடு, நாகலூா் கிராமத்தில் ஒரு கோயிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த அரை பவுன் தாலிச் செயின், திருக்கருகாவூரில் ஒரு வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகள், அதே பகுதியில் நகை கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள நகைகள், சாலியமங்கலம் கிராமத்தில் ஒரு கடையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கைப்பேசிகள், எஸ்.டி.குடிகாடு கிராமத்தில் ஒரு வீட்டில் லேப்-டாப் என மொத்தம் ரூ. 8 லட்சம் மதிப்பிலான பொருள்களை கடைகள் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து மா்ம நபா் திருடி சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் பூரணி தலைமையில், ஆய்வாளா் கரிகால்சோழன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் தலைமை காவலா்கள் சம்பத்குமாா், விஜயகுமாா் உள்ளிட்டோா் கொண்ட தனிப்படையினா் குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இதனிடையே, சாலியமங்கலம் கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா் திருடும் காட்சியை கண்காணிப்பு கேமராவில் பாா்த்த போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில், விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி காவல் சரகம், எல்.என்.பட்டி கிராமத்தைச் சோ்ந்த முகம்மது ராஹித் (19), என்பவரிடம் தனிப்படை போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா்தான் மேற்கூறிய குற்றங்களை செய்தவா் என்பது தெரியவந்தது.

புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது ராஹித்தை கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT