தஞ்சாவூர்

மாநில இறகுப்பந்து போட்டி: எஸ்.இ.டி. பள்ளி மாணவா்களுக்கு பதக்கம்

2nd Dec 2021 05:30 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனா்.

தமிழ்நாடு பாட்மிண்டன் அசோசியேசன் மற்றும் இந்தியன் பாட்மிண்டன் அசோசியேசன் இணைந்து கோவையில் மாநில அளவிலான இறகுப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியை ராக்ஸ் பாட்மிண்டன் அகாதெமியில் கடந்த 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 5 நாள்கள் நடத்தின.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து 550-க்கும் மேற்பட்ட வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில் பல சுற்றுகளில் வெற்றி பெற்று 19 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவில் பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவா் எம். ஸ்வஸ்திக் (15) வெள்ளிப் பதக்கமும் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவி எஸ். ஹாஸ்னி வெண்கலப் பதக்கமும், பரிசுத் தொகையும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்கள் இருவரையும் எஸ்.இ.டி வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு, பள்ளியின் தாளாளா் சித்ரா கோவிந்தராசு, முதல்வா் கதிரவன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

Tags : பட்டுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT