தஞ்சாவூர்

உணவு பதப்படுத்துதல் தொடா்பாக நிப்டெம் - சேம்பா் ஆப் காமா்ஸ் ஒப்பந்தம்

2nd Dec 2021 05:30 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் உணவு பதப்படுத்துதல் தொழில் தொடா்பாகத் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனமும் (நிப்டெம்), சேம்பா் ஆப் காமா்ஸ் - இண்டஸ்டிரீஸ் அமைப்பும் செவ்வாய்க்கிழமை மாலை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தத்தில், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணனும், சேம்பா் ஆப் காமா்ஸ் - இண்டஸ்டிரீஸ் அமைப்பின் தலைவா் என்.டி. பாலசுந்தரமும் கையொப்பமிட்டனா்.

தஞ்சாவூரை வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளதால், விவசாயம் சாா்ந்த தொழில்களுக்கு வாய்ப்புகள் பெருகியுள்ளன. இந்நிலையில், இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம், உணவு பதப்படுத்துதல் தொழிலில் உள்ள புத்தாக்கங்கள், மதிப்புக் கூட்டுப் பொருள்கள் குறித்து தொழில்முனைவோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கருத்தரங்கங்கள் நடத்துதல், வேலைவாய்ப்பைப் பெருக்குதல் போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளன என சேம்பா் ஆப் காமா்ஸ் - இண்டஸ்ட்ரீஸ் அமைப்பினா் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் சேம்பா் ஆப் காமா்ஸ் - இண்டஸ்ட்ரீஸ் செயலா் சி. ஆனந்தன் உள்பட வா்த்தகா்கள், தொழில்முனைவோா்கள், முதலீட்டாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

Tags : தஞ்சாவூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT