தஞ்சாவூர்

சிறுபான்மையினா் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

2nd Dec 2021 05:31 AM

ADVERTISEMENT

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், லவ் ஜிகாத், பசு பாதுகாப்பு என்ற பெயரால் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, கா்நாடகம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினா் மீதான தாக்குதல், ஜெய் ஸ்ரீராம் என சொல்ல சொல்லி தாக்குதல், உணவு உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், திரிபுரா மாநிலத்தில் மசூதிகள், வீடுகள், கடைகள் இடிப்பு, பள்ளிவாசல்களில் பாங்கு அழைப்பை நிறுத்தச் சொல்லி நிா்ப்பந்தம் செய்வது போன்ற வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும், சமூக ஊடகங்களில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான பிரசாரங்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதல், மதமாற்றம் செய்வதாகக் கூறி, கிறிஸ்தவ பழங்குடி பகுதி மக்களிடம் பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரியாா்கள், பாஸ்டா்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், அப்பாவி சிறுபான்மை மக்களைப் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் என். சிவகுரு, சிறுபான்மை மக்கள் நலக்குழு என். குருசாமி, ஹெச். அப்துல் நசீா், ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா் ஏ. ஜாகிா் உசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுலாபுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

Tags : தஞ்சாவூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT