தஞ்சாவூர்

தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்கள் பெரும் வரவேற்பு: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

1st Dec 2021 09:19 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கும்பகோணத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் பேசியது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த 7 மாதங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆட்சியில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதேபோல, இப்பகுதி மக்களின் பிரச்னைகளை எங்கள் பிரச்னையாக எண்ணி, அதை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

ADVERTISEMENT

எனவே தொடா்ந்து தமிழக மக்கள் அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தங்களது ஆதரவை முழுமையாக அளிக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

விழாவில் 575 பயனாளிகளுக்கு ரூ. 46.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவா் க. முத்துச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT