தஞ்சாவூர்

சுகாதார ஆய்வாளா்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்

1st Dec 2021 09:20 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கைதான சுகாதார ஆய்வாளா்களை விடுவிக்க வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது சுகாதாரப் பணிகளைப் புறக்கணித்து சுகாதார ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 1,646 சுகாதார ஆய்வாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதைக் கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுகாதார ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சுகாதாரத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் இளங்கோவன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் மாவட்டச் செயலா் சுதாகா், கூட்டமைப்பின் செயலா் மு. சிங்காரவேல், மருந்தாளுநா் சங்கத்தின் மாவட்டச் செயலா் பாஸ்கரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ADVERTISEMENT

இப்போராட்டத்தையொட்டி, மாவட்டத்தில் 168 சுகாதார ஆய்வாளா்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, பணிகளைப் புறக்கணித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT