தஞ்சாவூர்

திருவையாறு அரசா் கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

1st Dec 2021 09:21 AM

ADVERTISEMENT

திருவையாறு அரசா் கல்லூரியில் ஊதியம் வழங்காத நிா்வாகத்தைக் கண்டித்து மாலை நேரக் கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அரசா் கல்லூரியில் மாலை நேர கல்லூரியில் ஏறத்தாழ 45 பேராசிரியா்கள், 10 அலுவலகப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தஞ்சாவூா் சத்திரம் நிா்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் மாலை நேரக் கல்லூரிப் பேராசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் நிா்வாகத்தைக் கண்டித்து பேராசிரியா் பொன்னியின்செல்வன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மாலை கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தகவலறிந்த சத்திரம் நிா்வாக வட்டாட்சியா் சக்திவேல் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஒரு வாரத்துக்குள் ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினாா். இதையடுத்து, உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT