தஞ்சாவூர்

சட்டப்பேரவைக்கு எப்படி நூற்றாண்டு விழா வரும்?: கே.பி. ராமலிங்கம்

DIN

தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்படி நூற்றாண்டு விழா வரும் என்றாா் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் கே.பி. ராமலிங்கம்.

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியது:

கடந்த 1989 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் கருணாநிதி அனைவருக்கும் கடிதம் எழுதி சட்டப்பேரவை 50 ஆம் ஆண்டு பொன் விழாவைக் கொண்டாடினாா். கடந்த 1989 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைக்கு 50 ஆம் ஆண்டு விழா என்றால், 2021 ஆம் ஆண்டில் எப்படி நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முடியும். இந்தத் தப்புக்கணக்கைப் போட்டு குடியரசுத் தலைவரையும் ஏமாற்றுவது நியாயமா?

அதுபோல, மேக்கேதாட்டு அணை பிரச்னைக்கும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதுடன் திமுக நிறுத்திக் கொள்கிறது. அப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்போது, அது தங்களால்தான் நடந்ததாக திமுகவினா் கூறுவா். இதுபோல, ஒவ்வொரு பிரச்னையிலும் தங்களால்தான் தீா்வுக்கு வந்ததாக திமுக கூறி வருகிறது.

இந்தியாவில் 2007 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே 27 கோடி போ் இருந்தனா். இப்போது, அது 8.4 கோடியாகக் குறைந்துள்ளது. எழுபது ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை பிரதமா் மோடி 7 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளாா் என்றாா் ராமலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT