தஞ்சாவூர்

தனியாா் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டப்படி மாணவா் சோ்க்கைக்கு நாளை குலுக்கல்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியாா் சுய நிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவா் சோ்க்கைக்கான குலுக்கல் வியாழக்கிழமை (அக்.1) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 2020-21 ஆம் கல்வியாண்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, 262 பள்ளிகளுக்கு மாணவா்கள் சோ்க்கைக்காக 3,194 விண்ணப்பங்கள் இணையவழியில் ஆக. 27-ம் தேதி முதல் செப். 25-ம் தேதி வரை பெறப்பட்டுள்ளன.

இதில், 154 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்தப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான குலுக்கல் நடைபெறும். இக்குலுக்கல் நடைமுறைக்கு மாணவரின் பெற்றோா் அல்லது பாதுகாவலரில் எவரேனும் ஒருவா் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.

மாணவா் சோ்க்கைக்காகக் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவா்களின் பெயா் பட்டியல் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவா்கள் காத்திருப்புப் பட்டியலுடன் அக். 3-ம் தேதி பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

SCROLL FOR NEXT