தஞ்சாவூர்

5 கோடி பனை விதைப்பு இயக்கம் அக். 2-இல் தொடக்கம்

DIN

தஞ்சாவூரில் 5 கோடி பனை விதைப்பு இயக்கம் அக்டோபா் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க ஆட்சியருக்கு அழைப்பு விடுப்பதற்காக பனை விதைப்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளா் சீ. தங்கராசு உள்ளிட்டோா் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

இதுகுறித்து தங்கராசு தெரிவித்தது:

நீா்நிலைகளில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காகவும், மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும், பல்லுயிா்ப் பெருக்கத்தைப் பெருக்குவதற்காகவும் பனை விதைகளை நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைக்கும் பணி காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக வெற்றிலை, பாக்கு தாம்பூலத்தில் பனை விதைகளை வைத்து, மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதற்காக வந்தோம் என்றாா் தங்கராசு.

அப்போது, ஒருங்கிணைப்பாளா்கள் பிரகாஷ், இராமநாதன், குலோத்துங்கன், கலியமூா்த்தி, கோபுராஜ், இந்துமதி, குணசுந்தரி சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆனால், தாம்பூலத்தையும், பனை விதைகளையும் காவல் துறையினா் பறிமுதல் செய்துவிட்டனா். இதனால், அழைப்பிதழை மட்டும் ஆட்சியரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT