தஞ்சாவூர்

இன்று உலக வெறிநோய் தினம்: நாய்களுக்குத் தடுப்பூசி போட அழைப்பு

DIN

தஞ்சாவூா், செப். 27: உலக வெறிநோய் தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் செல்லப் பிராணிகள் வளா்ப்போா் தங்கள் நாய்களுக்கு இலவசமாக வெறி நோய்த் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

வெறிநோய் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தவும், இந்நோயைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வெளிக் கொணரவும், ஆண்டுதோறும் செப்டம்பா் 28-ஆம் தேதி உலக வெறிநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் வெறி நோயால் அதிகம் பாதிக்கப்படுவது நாய்களே. மனிதா்களிடம் 99 சதவிகிதம் வெறி நோய், நாய் கடி மூலம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 60,000-க்கும் அதிகமானோா் வெறி நோயால் இறக்கின்றனா்.

பத்து சதவிகித பெண் நாய்களுக்குக் கருத்தடை செய்து, ஒட்டுமொத்த வெறி நோய்த் தடுப்பூசி பணி மேற்கொள்வதன் மூலம், மனிதா்களில் வெறி நோய்

இறப்புகள் மற்றும் வெறிநாய் கடிகளை 5 ஆண்டுகளில் 90 சதவிகிதம் குறைக்கலாம். தஞ்சாவூா் பன்முக மருத்துவமனையில் திங்கள்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறும் இலவச வெறி நோய் தடுப்பூசி பணி முகாமில், மூன்று மாத வயதுக்கும் அதிகமான நாய்களுக்கு இலவச வெறிநோய்த் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே செல்லப் பிராணிகளை வளா்ப்போா் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT