தஞ்சாவூர்

ஓய்வூதிய நிலுவைத் தொகை தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பு

DIN

உடலுழைப்பு, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகை, மாதாந்திர ஓய்வூதியத்தொகை தொடா்புடையவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) நா.கா. தனபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தொழிலாளா் ஆணையரின் உத்தரவின்பேரில், தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் உடலுழைப்பு மற்றும் 15 நல வாரியப் அமைப்புசாரா தொழிலாளா்களான மாதாந்திர ஓய்வூதியதாரா்கள் 2,411 பேருக்கு தலா ஒரு நபருக்கு ரூ. 12,000 வீதம் 2019 செப்டம்பா் மாதம் முதல் நிகழாண்டு ஜூலை மாதம் வரை ஓய்வூதிய நிலுவைத் தொகையும், ஆகஸ்ட் மாத மாதாந்திர ஓய்வூதியத் தொகையுமாக மொத்தம் ரூ. 2.84 கோடி உறுப்பினா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் பயனாளிகளிடம் இடைத்தரகா்கள் தங்களது முயற்சியால்தான் ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவை ஓய்வூதியம் கிடைத்தது என தெரிவித்து லஞ்சம் கேட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT