தஞ்சாவூர்

ஊரணிபுரம் பகுதியில் மின் விநியோக நேரத்தில் நாளை முதல் மாற்றம்

DIN

ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் அதிக திறனுள்ள மின்மாற்றி அமைப்பதால், வரும் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மின்வழங்கல் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது  என ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இதன்படி, ஊரணிபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும், ஊரணிபுரம் மின் பாதை, உஞ்சியவிடுதி மின் பாதை வழியாக மின் விநியோகம் செய்யப்படும்.

இதனால், ஊரணிபுரம், வெட்டுவாக்கோட்டை, சிவவிடுதி, ராங்கியன்விடுதி, உஞ்சியவிடுதி, அம்மங்குடி, தோப்புவிடுதி ஆகிய கிராமங்களுக்கு முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மும்முனை மின்சாரமும், மற்ற நேரங்களில்  இரு முனை மின்சாரம் வழங்கப்படும்.

மேலும் தளிகைவிடுதி மின்பாதை, பாதிரங்கோட்டை மின்பாதை வழியாக மின் விநியோகம் செய்யப்படும்.

இதனால், தளிகை விடுதி, காட்டாத்தி, கொள்ளுகாடு, பாதிரங்கோட்டை கிராமங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை மும்முனை மின்சாரமும்,  மற்ற நேரங்களில் இருமுனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT