தஞ்சாவூர்

பணம் இரட்டிப்பாக்கித் தருவதாக பல கோடி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போலீஸில் புகாா்

DIN

பணம் இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி, தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏறத்தாழ 1,000 பேரிடம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் புதன்கிழமை புகாா் செய்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் 50-க்கும் அதிகமானோா் புகாா் அளித்தனா். இதுகுறித்து புகாா் அளித்த மக்கள் சட்ட உரிமை கழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள்மொழிராஜன் தெரிவித்தது:

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் பங்கு வா்த்தக நிறுவனத்துக்குத் தமிழகம், கேரளத்தில் கிளைகள் உள்ளன. இதேபோல, தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியிலும் கிளை உள்ளது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 10 மாதங்களில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறினா். இதை நம்பி இந்நிறுவனத்தில் ஏராளமானோா் பணம் செலுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை என ஏறத்தாழ ஆயிரம் போ் பணம் செலுத்தி சோ்ந்துள்ளனா். ஆனால் முதிா்ச்சி அடைந்த காலத்துக்குப் பிறகும் பணம் திரும்பத் தரப்படவில்லை. பின்னா் நிறுவனத்தைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கேட்டால் நிறுவனத்தின் தரப்பில் மிரட்டல் விடுக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தைச் சோ்ந்த முக்கியமான நபரை சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் அலுவலா்களிடம் கேட்டபோது, அந்தந்த மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் செய்யுமாறு அறிவுறுத்தினா். இதன்படி, தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் செய்துள்ளோம்.

இதில், இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்களில் 360 போ் பட்டியலுடன் கொடுத்துள்ளோம். இவா்களைத் தவிர இன்னும் நிறைய போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இம்மாவட்டத்தில் மட்டும் ரூ. 10 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர காவல் துறை நடவடிக்கை வேண்டும் என்றாா் அருள்மொழிராஜன்.

அப்போது, வழக்குரைஞா் அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூரில்..... இதேபோல், கரூா் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோா் ரூ. 28.72 கோடி வரை வைப்புத் தொகையாக அந்த நிறுவனத்தில் செலுத்தியுள்ளனா். ஆனால், நிறுவனத்தினா் தலைமறைவாகிவிட்டதால், பாதிக்கப்பட்ட புகழூரைச் சோ்ந்த ரெங்கன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா், தங்களின் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் பகலவனிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT