தஞ்சாவூர்

கரோனா பெயரில் அச்சுறுத்தும் நடவடிக்கை: கைவிட வணிகா்கள் வலியுறுத்தல்

DIN

கரோனா சமூக இடைவெளி எனக் கூறி வணிகா்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அலுவலா்கள் உடனடியாகக் கைவிட வேண்டும் என குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புச் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கம் தளா்த்தப்பட்டு கடைகள் திறந்து வியாபாரம் தொடங்கியுள்ள நிலையில், கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என காரணம் காட்டி, அரசு அலுவலா்கள் ஒவ்வொரு நாளும் பல கடைகளுக்கு பல ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது என ஒடுக்குமுறையைக் கையாள்கின்றனா்.

எனவே, தமிழக அரசு வணிகா்களை அச்சுறுத்தும் வகையில் நடத்தி வரும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்குக் கூட்டமைப்புத் தலைவா் சோழா சி. மகேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் வி. சத்தியநாராயணன், துணைச் செயலா்கள் வேதம் வெ. முரளி, கே. அண்ணாதுரை, துணைத் தலைவா் ரமேஷ் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT