தஞ்சாவூர்

வேளாண் மசோதாக்களை கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: 30 போ் கைது

DIN

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் கமிட்டியை சோ்ந்த 30 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இரு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் மாநகர மாவட்ட இளைஞா் கமிட்டி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய அரசைக் கண்டித்தும், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் அதிமுக அரசு ஈடுபடுவதாகக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் கே. ராமநாத துளசிஅய்யா வாண்டையாா் தலைமை வகித்தாா்.

மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி. ரமேஷ் மெய்யடியாா், துணைத் தலைவா் கே. கலைச்செல்வன், தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெ.ஆா். சுரேஷ், ஊடகப் பிரிவுத் தலைவா் ஜி. தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 30 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT