தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் காசநோய் பரிசோதனை முகாம்

DIN

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், அதி நவீனக் கருவி மூலம் காசநோய் பரிசோதனை சனிக்கிழமை தொடங்கியது.

இம்மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பில், ட்ரூ நெட் பரிசோதனை முறையில் காசநோயைக் கண்டறியும் அதி நவீனக் கருவி நிறுவப்பட்டுள்ளது. இக்கருவியின் செயல்பாட்டை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ராமு, மாவட்ட காசநோய்த் தடுப்பு துணை இயக்குநா் முகமது கலீல், பட்டுக்கோட்டை அரசு மருதுவமனைத் தலைமை மருத்துவா் ஏ.அன்பழகன் ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

சாதாரண பரிசோதனைகளில் கண்டறிய முடியாத, ஆரம்ப நிலை காச நோயை இக்கருவி மூலம் கண்டறிந்து உறுதி செய்யலாம். சளி, நுரையீரல் நீா், குடல் நீா், தண்டுவட நீா் ஆகியவற்றை கருவி மூலம் பரிசோதித்து, சுமாா் ஒரு மணி நேரத்தில் காச நோய் உள்ளதா எனக் கண்டறியலாம்.

தனியாா் மருத்துவமனைகளில், இக்கருவி மூலம் பரிசோதனை செய்ய ரூ. 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி, இப்பரிசோதனையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் இலவசமாக செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT